கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்?

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஈபிடிபி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மு.சந்திரகுமாரின் சமத்துவ சமூக நீதிக்கான கட்சியின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கலந்து கொண்டிருந்தார்.

அவர் அங்கு கருத்து வெளியிடுகையில் 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்போராளிகளை புனர்வாழ்வு அளித்து இலங்கை அரசினால் விடுவிக்கமுடிகின்றது.ஆனால் இந்த அரசு வெறும் 130 அரசியல் கைதிகளை விடுவிக்க ஏன் பின்னடிக்கின்றதென கேள்வி எழுப்பியிருந்தார்.

அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி ஏற்கனவே யாழ்ப்பாணம்,வவுனியா,மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிளிநொச்சியிலும் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *