கிளிநொச்சி பிரதேசசெயலக அழகுசுந்தரத்தின் திருவிளையாடல்!! முன்னாள் பெண் போராளிக்கு நடந்த கதி!!

முன்னாள் போராளியும் ,3 மாவீரர்களின் சகோதரியுமான திருநகரில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தாயான எழில்வேந்தன் புவனேஸ்வரி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக நில அலுவலரால் மிரட்டப்பட்டார்

தனது தற்காலிக வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று தாக்கி அழித்துள்ளதுடன், தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தனது இரணடு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருக்கும் எனது தற்காலிக வீட்டை 15 பேர் கொண்ட குழுவொன்று முற்றும் முழுதாக தாக்கி அழித்துள்ளனர்.

அத்துடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சேதமாக்கியுள்ளதுடன், எனது பிள்ளை ஒருவரை கொலைசெய்யப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு தனது சகோதரனுக்கு குறித்த காணியை அழகுசுந்தரம் என்றவர் விலைக்கு விற்றுள்ளார் என்றும், எனினும் தற்போது இயக்கம் இல்லை என்றதனால் தான் காணியை விற்கவில்லை என்றும் தன்னை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகளிடத்தில் முறையிட்ட போதும், வீரச்சாவடைந்த உன் சகோதரன் நிலத்தில் இருந்து எழுந்து மீண்டும் எழுந்து வந்தவுடன் நான் கதைக்கின்றேன், இப்போது காணியை விட்டு வெளியே செல் என தன்னை அவதூறாக பேசி அனுப்பியதாக குறித்த பெண் முறையிட்டுள்ளார்.

எனது இந்த நிலைமைக்கு நீதிவேண்டும். இல்லையென்றால் எனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைசெய்து கொள்ளப்போவதாக” எச்சரித்துள்ளார். இதேவேளை, குறித்த பெண் கணவரை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *