சாவகச்சேரியல் பெண்களின் கைபைகளை நீண்டகாலமாக அறுத்த கொள்ளையர் பிடிபட்டார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பெண்களின் கைபைகளை நீண்டகாலமாக பறித்துச்சென்ற தச்சன் தொப்பு பகுதியில் வசித்தவரும் 23 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரி பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மோட்டார் சைக்கிள் இரண்டு,19000 ரூபா பெறுமதியான பணம் கையடக்க தொலைபேசி 18 கைப்பைகள் 4  வங்கிப்புத்தகங்கள் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன அவருடைய வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச் செயலை கண்டுபிடிக்க சாவகச்சேரி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்கே,குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.விஜயகோன்,உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன்,மாவட்ட புலனாய்வுக் குழு பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப், மற்றும் நா.விஜிதரன் பொலிஸ் காண்டபிள், நிசாந்த, பண்டார,ரத்னாயக்க,சுரேஷ், புவனச்சந்திரன், நவரத்தினம்,தினேஷ், ரங்க, ஆகியோர் அடங்கிய குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரிடம் இருந்த பொருட்களை மீட்டனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *