திருமண விளம்பரம் பார்த்து இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த பல சம்பவங்களுக்கு தொடர்புடை நபரை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்காலை பிரதேசத்தில் உள்ள இளம் பெண்களை அடையாளம் கண்டு அவர்களின் நகைகளை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் வெளியாகியிருந்த திருமண விளம்பரத்தை பார்த்து அதிலுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பெற்றோர் போன்று வேறு நபர்களை அந்த பெண்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து நம்பிக்கையை உறுதி செய்யப்படுகிறது. பின்னர் பெண்களிடம் குறித்த நபர் பேச ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண்கள் தங்காலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். சில நாட்கள் தொலைபேசியில் உரையாடிய இந்த நபர் நேரில் பேச வேண்டும் என மாத்தறைக்கு வருமாறு குறித்த பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய காலியில் உள்ள தர்மபால பூங்காவுக்கு இந்த பெண்களை அவர் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஹோட்டல் அறைக்கு செல்வோம் என அழைத்துள்ளார். அதற்கு பெண்கள் விரும்பாத நிலையில் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை அவதானித்த பின்னர் தனக்கும் அவ்வாறான சங்கிலி மற்றும் பென்டன் ஒன்று செய்ய வேண்டும், அதற்காக இந்த மாதிரி தேவைப்படுகின்றது. தரமுடியுமா என அவர் குறிப்பிட்டு அதனை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் பொலிஸார் நுட்பமான முறையை பயன்படுத்தி இந்த நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் முதல் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் இரண்டாவது திருமணம் செய்தவர் என தெரியவந்துள்ளது.

இதேபோன்று பல பெண்களிடம் பல லட்சம் ரூபாயை குறித்த நபர் மோசடியான முறையில் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *