முறையிட்ட மாணவியை மிரட்டிய பொலிசார்!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டபோது, கீழ்த்தரமான வார்த்தைகளால் மாணவியை திட்டி பொலிசார் விரட்டியுள்ளனர்.

கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராக பணிபுரிபவர் பார்த்தீபன். மாணவர்களிற்கு பிரத்தியோக வகுப்புக்களையும் இவர் நடத்துகிறார்.

இவரிடம் பிரத்தியேக வகுப்பிற்கு வரும் மாணவிகளிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், மாணவியொருவர் துணிந்து செய்த முறைப்பாட்டையடுத்து, சில்மிசம் புரிந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

எனினும், அண்மையில் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

பிணையில் விடுதலையாகி மீண்டும் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், பிணையில் விடுதலையான பின்னர், அவர் மீது முறைப்பாடு செய்த மாணவியின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். விசுவமடு பிரமந்தனாறில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற பார்த்தீபன், வழக்கை கைவிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்குமென்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, மாணவியை அழைத்துக் கொண்டு பெற்றோர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்ய சென்றுள்ளனர். முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த தருமபுரம் பொலிசார், “நீ அவனோட படுத்தனீ தானே?“ என மாணவியை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக மாணவியின் உறவினர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

பிரத்தியோக வகுப்பு என்ற பெயரில் மாணவிகளை சீரழித்த ஒருவர், எந்த நீதி விசாரணைக்கும் உட்படாமல் பொலிசாரின் உதவியுடன் மீண்டும் சமூகத்தில் இணைவது ஆபத்தானதென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *