யாழில் குழந்தைகளின் பாம்போஸா உணவு தயாரிப்பில் சீர்கேடு..!

காரைநகர் பிரதேசத்தில் குழந்தைகளிற்கு தயாரிக்கும் பாம்போஸா மாவில் கலப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 3000 kg தரமற்ற புழுக்கொடியல்கள் பொதுசுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேசத்தில் குழந்தைகளிற்கு தயாரிக்கும் பாம்போஸா மாவில் கலப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 3000 kg தரமற்ற புழுக்கொடியல்கள் பொதுசுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என எமது  செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இப் பாம்போஸா உற்பத்தி நிறுவனம் எவ்வித அனுமதியுமில்லாமல் பழுதாய்போன ஒடியல்களை பருத்தித்துறை யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள தம் இதர நிறுவனங்களில் இருந்து  கொள்வனவு செய்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பழுதான நிலையில் பெறப்பட்ட  புழுக்கொடியல்கள் காரைநகரிற்கு கொண்டு வந்து மாவாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் சுகாதார பரிசோதரகர்களால் அதிரடியாக கைப்பற்றப்பட்டிருந்தது. மேலும் பூஞ்சணம் பிடிக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்த 230kg பனாட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வண்டுகளுடன் மாவாக்கப்பட்ட 24 kg புழுக்கொடியல் மாவும் கைப்பற்றப்பட்டது.

இவை அனைத்தும் உணவுச்சட்டத்தின் பிரகாரம் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *