யாழ் சுன்னாகத்தில் சற்று முன் பயங்கர விபத்து

யாழ். சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இன்று(13) சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இன்று(13) சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியில் வீதியோரமாகத் தரித்து நின்ற பல்சர் ரக மோட்டார்ச் சைக்கிளை கே.கே.எஸ். வீதியால் யாழ். நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் பின்பக்கமாக கடுமையாக மோதித் தள்ளியுள்ளது.

சம்பவத்தில் குறித்த மோட்டார்ச் சைக்கிள் உரிமையாளர் உள்ளிட்ட இரு இளைஞர்களும் உடனடியாகச் சுதாகரித்துக் கொண்டமையால் சிறுகாயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும் மோட்டார்ச் சைக்கிள் மீண்டும் பயன்படுத்தாதவளவுக்கு கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

விபத்துக்குக் காரணமான பஸ் சாரதி ஏற்றிச் சென்ற பயணிகளைக் கைவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று சுன்னாகம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

பஸ் சாரதியின் கவனயீனமே குறித்த சம்பவத்துக்கு காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *