யாழ் பலாலி விமானநிலையம் கேந்திர முக்கிய நிலையமாக மாறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சும், கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.

இந்தியாவுடன் இணைந்து குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன்படி இந்திய அதிகாரிகள் குழு ஒன்று பலாலிக்கு விஜயம் செய்து, ஆய்வுகளை நடத்தி இருந்தது.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும், அந்த நாட்டின் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில், பலாலி விமானநிலைய சாத்தியப்பாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இந்தநிலையிலேயே இன்றையதினம் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படுகிறது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *