வடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையினை நம்பிய பெரும்போக பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்வயல் நிலங்களின் உரிமையாளர்கள் தமது நிலத்தை காலபோக நெற் செய்கைக்காக உழவு செய்த நிலையிலேயே குறித்த வயற்;பிரதேசம் தமது ஆளுகைப் பகுதி என வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்துள்ளது.
வடமராட்சி கிழக்கில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பகுதிக்குள் உள்ளடங்குகின்றது.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக எல்லைக்குள் உள்ளடங்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்குள் மட்டும் மக்களிற்குச் சொந்தமான குடியிருப்புக் காணிகள், வாழ்வாதார வயல்நிலங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டுக் காணிகளென சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் சேர்த்து அபகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *