யாழ் மாதகலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

யாழ். மாதகல் கடற்பரப்பில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 151.7 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 2 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதகல் கடற்பரப்பிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் வைத்து, நேற்றைய தினம் படகொன்றில் கேரள கஞ்சாவை இருவர் கடத்த முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 19 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *