யாழில் பெருங்குற்றப்பிரிவினருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு காவற்துறையினருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் உரிய முறைகளில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருபதாகவும் தெரிவித்தே அப்பிரிவில் கடமையாற்றிய எட்டு காவற்துறையினரும் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரெஷான் பெனர்ண்டோவின் உத்தரவில் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய காவற்துறை நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்துள்ளது.

குறித்த இதே வேளையில் கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான காவற்துறை நிலையத்தின் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து காவற்துறை உத்தியோகஸ்தர்களும் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *