யாழ்.வடமராட்சியில் தந்தை மகன் சண்டையில் தந்தை தற்கொலை

யாழ்.வடமராட்சிப் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தந்தை மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் , தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கரவெட்டி தேவரையாளி எனும் இடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அவ்விடத்தை சேர்ந்த 63 வயதான பாக்கியராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளநிலையில் திடீரென ஆத்திரமுற்ற தந்தை வீட்டில் இருந்த கத்தியால் மகனை இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார்.

அதனை அடுத்து அயலவர்களின் உதவியுடன் வீட்டார் கத்தி வெட்டுக்கு இலக்கான மகனை மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வைத்திய சாலை காவல்துறையினர் நெல்லியடி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து நெல்லியடி காவல்துறையினர் வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற சமயம் இரவு 10.30 மணியளவில் தந்தை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *