பருத்தித்துறை குடத்தனை கொலைவெறித் தாக்குதல்!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

முதலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின் வெளியே படுத்திருந்த கணவனை கண்மூடித் தானமாக வெட்டியுள்ளார். பின்னர் மனைவியையும் கண்மூடித்தனமான வெட்டி வீட்டிலிருந்து இழுத்துச் சென்று 100 மீற்றர் தூரத்தில் விட்டுத் தப்பியோடியுள்ளார்.படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவங்களால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *