இலங்கையின் புலனாய்வுப்பார்வை – சேதுவின் சட்ட வேவு

இலங்கையில் உண்மையில் இன்று என்ன நிலமை என்று பார்த்தால் இதுதான் 100 வீதம் உண்மை.

இலங்கையில் 2015 தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராகத் தேர்தலில் குதித்தார்.

அன்னம் சின்னத்தில் பிரித்தானிய பிரஜையின் பேரில் அரசியலமைப்புக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட கட்சியில் தேர்தலில் குதித்து வடபகுதி தமிழரின் வாக்கில் ஜனாதிபதி மகிந்தவை விடவும் 1 இலட்சம் வாக்கால் சட்டரீதியற்ற முறையில் மோசடியான முறையில் ஜனாதிபதியானார்.

இலங்கையின் சட்டப்படி இலங்கையின் அரசியலைப்புபடி பிரித்தானிய பிரஜை அரசியல் கட்சி பதியவும் முடியாது , பிரித்தானிய பிரஜை தேர்தலில் நிக்கவும் முடியாது.

பிரித்தானிய பிரஜையின் கட்சியில் தேர்தலில் போட்டி இடவும் முடியாது.

சட்டப்படி குறித்த கட்சி செல்லுபடி அற்றது.  

சட்டப்படி குறித்த கட்சிக்கு விழுந்த வாக்குகள் பெறுமதியற்றவை.

ஆகவே குறித்த கட்சியில் தேர்தலில் குதித்தவர் நிராகரிக்கப்பட்டவராக கருதபடல்வேண்டும்.

ஆனால் 2 கோடி இலங்கை மக்களையும் சுத்த முட்டாளாக்கி மைத்திரி ஜனாதிபதியானார்.

சட்டரீதியற்ற முறையில் மோசடியான முறையில் ஜெனாதிபதியான மைத்திரி ஒரு அரசை அமைந்தார் ஒப்பந்தங்கள் செய்தார் உலக நாடுகளுடன் கதைத்தார் 3 வருடம் ஆட்சி செய்தார் மொத்தத்தில் அவர் வைத்த அனைத்து கை எழுத்துகளும் செல்லுபடி அற்றது.

சட்டப்படி அரசியலமைப்பின்படி 2015ம் ஆண்டு தேர்தல் முடிவின்படி இன்றும் ஜனாதிபதி மகிந்த றாஜபக்சவே.

மோசடியான முறையில் ஆட்சி அமைத்தபோது பிரதமரானார் றணில் விக்கரமசிங்க.

அவர் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டு 11 கோடி டாலர் ஊழல் மோசடியில் உள்ளார்.

சட்டப்படி இவர் இந்த மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் இடப்படவேண்டியவர்.

மைத்திரிபால றணிலை அகற்றி மகிந்தவை பிரதமராக்கி உள்ளார்.

தற்போது றணில் மைத்திரி தன்னை பதவி நீக்கியது தவறு என்று மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. ஏன் என்றால் நீதிமன்றம் சென்றால் றணில் மத்திய வங்கி ஊழலில் சிறை செல்ல வேண்டும்.

அதேநேரம் மகிந்த றாஜபக்சவை பிரதமர் பதவில் இருந்து அகற்ற முடியாது. காரணம் மகிந்த றாஜபக்ச மைத்திரி ஜனாதியாக இருக்க முடியாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் மைத்திரிபால சிறை செல்ல வேண்டும்.

மொத்தத்தில் தற்போது இலங்கையில் சட்டரீதியற்ற ஒரு ஜெனாதிபதியும் சட்டரீதியற்ற இரண்டு பிரதமரும் பதவியில் உள்ளனர்.

மொத்தத்தில் இலங்கையில் தற்போது சட்டரீதியான ஒரு ஜனாதிபியோ அல்லது சட்டரீதியான ஒரு பிரதமரோ இல்லை.

இலங்கையில் தற்போது ஒரு சட்டரீதியான ஜனாதிபியோ சட்டரீதியான பிரதமரோ சட்டரீதியான அமைச்சரவையோ இல்லை. ஆகவே இலங்கையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை.

இலங்கை நாடு உடனடியாக ஒரு ஜனாதிதி தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

இல்லை என்றால் 2015ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி மகிந்த ஜனாதியாக நியமனமாகவேண்டும்.

மகிந்த ஜனாதிபதியாக நியமனவாவது என்றால் மைத்திரி சட்டப்படி கைதாகவேண்டும்.

ஆகவே இலங்கையில் கடந்த 3 வருடமாக ஒரு மோசடி அரசியல் நிலமை இருந்து வருகிறது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *