யாழ்ப்பாண வடிவேலுக்கு பிடியாணை!!

தமிழ் சினிமாவில் வடிவேலு எவ்வாறு செயற்படுகின்றாரோ அதே போல் நிஜமாகவே செயற்பட்டு பலரிடம் அடி உதை வாங்கியும் நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கபடுபவனுமாகிய யாழ்ப்பாண வடிவேலு என மக்களால் அழைக்கப்படும் ஈஸ்வரன் பேருந்து நிறுவன உரிமையாளரும், ஐ.தே.க கட்சியின் போலி அமைப்பாளருமாகிய தியாகராஜா.துவாரகேஸ்வரனுக்கு ஊர்காவற்துறை நீதி மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணை ஊர்காவற்துறை நீதி மன்றில் நேற்றுக் காலை பிறப்பிக்கப்பட்டது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் மீது போலியான, பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிட்டமை தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் அவர்களினால் அவதூறு வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இதனையடுத்து தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு ஊர்காவற்துறை நீதி மன்றத்தால் அழைப்பாணை விடுக்கப் பட்ட நிலையில் இந்த வழக்கு நேற்று (30.10.2018) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நேர்வேயில் வசித்து வரும் ஊடகவியலாளன் ந.சேது என்பவர் தனது முகப்பு புத்தகத்தில் வெளியிட்ட புகைபடத்தை திருடி போலியான அவதூறு செய்யும் நோக்குடன் துவாரகேஸ்வரன் ஊடக சந்திப்பு நடாத்தி இருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் படி இன்று காலை துவாரகேஸ்வரன் நீதி மன்றத்திற்கு சமூகம் அளிக்காத நிலையில் இவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி அவர்களால் கடுமையான கண்டனம் தெரிவிக்கப் பட்டதுடன் தியாகராஜா துவாரகேஸ்வரனை உடனடியாக கைது செய்து நீதி மன்றில் முன்னிலை படுத்துமாறு சிரேஷ்டா பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நேர்வேயில் வசித்து வரும் ஊடகவியலாளன் ந.சேது என்பவர் தனது முகப்பு புத்தகத்தில் வெளியிட்ட புகைபடத்தை திருடி போலியான அவதூறு செய்யும் நோக்குடன் துவாரகேஸ்வரன் ஊடக சந்திப்பு நடாத்தி இருந்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *