யாழில் பலநாட்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்

யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்மராட்சி பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியில் இருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்னறனர்.

கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளம் கண்டு சாவகச்சேரி காவல் நிலையத்தில் முகாமையாளர் முறைப்பாடு செய்தார்.முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள். உரிமையாளரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்வனவு செய்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கோப்பாய் , மானிப்பாய் மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்த நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் சாவகச்சேரி காவல் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *