ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் குகேந்திரன் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது: நீதிமன்று தீர்ப்பு

வடதமிழீழம், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட வேலும்­ம­யி­லும் குகேந்­தி­ரன் இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­தால் மாந­கரசபை உறுப்­பி­ன­ராக அங்­கம் வகிக்க முடி­யாது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குத் தெரி­வான ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி உறுப்­பி­னர் வே.குகேந்­தி­ரன் (ஜெகன்) இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர். அந்த அடிப்­ப­டை­யில் அவர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் அங்­கம் வகிக்க முடி­யாது. அத­னால் குகேந்­தி­ர­னின் மாந­கர சபை உறுப்­பு­ரிமை செல்­லு­ப­டி­யற்­றது என்று தேர்­தல் ஆணை­யத்­துக்கு உத்­த­ர­வி­டக் கோரி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மாந­கர சபை­யால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றால் விசா­ர­ணைக் எடுக்­கப்­பட்­டது. மனு­தா­ரர் தரப்­பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், நிரான் அங்­கிற்­றல் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர்.

இரு­த­ரப்பு வாத­மும் நிறைவு செய்­யப்­பட்ட நிலை­யில் எழுத்­து­மூ­ல­மான சமர்ப்­ப­ணத்­துக்கு சந்­தர்ப்­பம் வழங்­கப்­பட்­டது. ஒக்­ரோ­பர் 12ஆம் திக­திக்கு முன்­னர் எழுத்­து­மூல சமர்ப்­ப­ணத்தை முன்­வைக்க வேண்­டும் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று உத்­த­ர­விட்­டி­ருந்­தது. மனு­தா­ரர் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­கள் தமது எழுத்­து­மூல சமர்ப்­ப­ணத்­தைச் சமர்ப்­பித்த நிலை­யில் எதிர் மனு­தா­ரர் எழுத்­து­மூல சமர்ப்­ப­ணத்தை முன்­வைக்­க­வில்லை.

வழக்கை ஆராய்ந்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று நேற்று வழக்­கின் தீர்ப்பை அறி­வித்­தது.

குறித்த மாநா­கர சபை உறுப்­பி­னர் பிற­நாடு ஒன்­றுக்கு விசு­வா­ச­மாக இருப்­பது எண்­பிக்­கப்­பட்ட நிலை­யில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் சட்ட விதிக் கோவை 9இன் பிர­கா­ரம் வேலும்­ம­யி­லும் குகேந்­தி­ரன் மாந­கர சபை உறுப்­பி­ன­ராக இருப்­ப­தற்கு வழங்­கப்­பட்ட இடைக்­கா­லத் தடையை உறுதி செய்து அந்த நபர் உறுப்­பி­ன­ரா­கத் தொடர முடி­யாது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று தீர்ப்­ப­ளித்­தது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *