யாழில் வங்கிக்கு சென்ற முதியவருக்கு ஏற்பட்ட கதி!

யாழ்.திருநெல்வேலியிலுள்ள வங்கியொன்றில் பணம் எடுக்கச் சென்ற முதியவர் திடீரன மயக்கமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது. 

மேற்படி சம்பவம் நேற்று வியாழக்கிழமை(08) இடம்பெற்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த முதியவர் நேற்றைய தினம் யாழ்.திருநெல்வேலியிலுள்ள வங்கியொன்றுக்குப் பணம் எடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் வங்கியில் குறித்த முதியவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, குறித்த சம்பவத்தில் யாழ். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த ஆறுமுகம் கார்த்திகேசு(வயது-65) என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *