அரசியல் அறிவிலித்தனத்தால் ஓய்வூதியம் இழந்த தமிழ் உறுப்பினர்களின் விபரம்

ந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது.

இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம் அமைந்துள்ளது.

எனவே, இம்முறை முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத்துக்கும் தெரிவு செய்யப்பட்டு, அதில் ஐந்து வருடத்தை பூர்த்தி செய்யும் வகையில், மிகுதிக் காலத்துக்கும் பதவி வகிப்பார்களாயின், அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாவர்.

உதாரணமாக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலிருந்து இறுதி வரை உறுப்பினராகப் பதவி வகித்த ஒருவர், எதிர்வரும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகி, அதில் சுமார் 18 மாதங்கள் பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்தும், ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் நிலைவரம் ஏற்பட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு;

01) ஏ. அரவிந்த்குமார்

02) எம். வேலுகுமார்

03) கே. கோடீஸ்வரன்

04) ம. திலகராஜா

05) எஸ். சிவமோகன்

06) அங்கஜன் ராமநாதன்

07) எஸ். வியாழேந்திரன்

08) ஞானமுத்து ஸ்ரீநேசன்

09) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ

10) சார்ள்ஸ் நிர்மலநாதன்

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *