தம்பி தற்கொலை!! யாழில் சம்பவம்

தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று உறவினர் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு சென்றுள்ளார். இரவு உணவு உண்பதற்கு வரவில்லை.

இந்த நிலையில் அடுத்த நாள்காலை அவரது வீட்டில் சடலமாக காணப்பட்டுளளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.

இந்த மரண விசாரணையை தென்மராட்சி பகுதி மரண விசாரணை அதிகாரி இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.

இதே வேளை குறித்த இளைஞனுக்கு அண்ணனே காசு அனுப்பி வந்ததாகவும் தொடர்ச்சியாக காசு அனுப்பாத காரணத்தால் இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *