மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீட்பு

யாழ் கொடிகாமம் கெற்பேலி பிரதேசத்தில் கடற்கரைப் பகுதியில் இன்று (9) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்களான தினேஷ் மற்றும் விஜிதரன் ஆகியோருக்கு கிடைத்த இரகசியத்தகவல்களை அடுத்து தகவல் உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதிரடியாக செயற்பட்ட கொடிகாமம் உப பொலிஸ் பரிசோதகர் நிமால் தலைமையிலான குழுவினர் மணலுடன் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர். எனினும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் மூவர் தப்பியோடியுள்ளனர்.

மேலும் தப்பியோடிய மூவரையும் பொலிஸார் இனங்கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *