சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்.கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை காலம் ஆகையால் சீயக்காடு இந்து மயாணத்தின் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால் உடலை தகனம் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கூரைகள் சேதமடைந்து இருப்பது தெரிந்தும் பிரதேச சபை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மழையில் உடலை தகனம் செய்யும் போது நனைந்து மறுநாள் வரை மயாணத்தில் இருந்து உடலை தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரதேச சபையிடம் முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *