குளத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி – யாழில்சம்பவம்..

யாழ்ப்பாணம் – அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

குளத்தில் நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள் யாழ்  கொடிகாமம் பொலிஸ்நிலையத்தில்   முறைப்பாடு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து கடற்படையினர் குளத்தில் தேடுதலை மேற்கொண்ட போது அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவ்க்கப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *