யாழ். ஏழாலையில் திருமண வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மாயம்

யாழ்.ஏழாலை கிழக்குப் பகுதியில் திருமண வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியொன்று திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(18) இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் சிலர் தாம் பயணித்த முச்சக்கர வண்டியைத் திருமண வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு கலைநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இதன் போதே குறித்த முச்சக்கர வண்டி திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

இதேவேளை,குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *