யாழ் திடீர் கடல் கொந்தளிப்பு தொடர் மழை மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால், மீனவர்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார்.

அத்தோடு நவம்பர் மாதம்வரை 611.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 300.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

இது, கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாகவும், நவம்பர் மாதம் முடிவடைவதற்கு 10 நாட்கள்வரை இருக்கும் நிலையில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று காலை 8.30 மணியளவில் இருந்து இன்று காலை 8.30 மணிவரை யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக சாவகச்சேரி பகுதியில் 43.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதோடு, அச்சுவேலிப்பகுதியில் 23.5 மீல்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்தித்துறையில் 33.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நயினாதீவில் 21.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 17.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணம்-கச்சேரிபகுதியில் 22.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதீபன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய காலநிலையை பொறுத்தவரை கடலோர பிரதேசங்களில் காற்றானது 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதால், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *