அச்சுவேலியில் குடியிருப்புக்களில் வெள்ளம்!

அச்சுவேலி தெற்கில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாதிப்பு பற்றி நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியிலாளரை பாதிப்புக்கள் உணரப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று எதிர்காலத்திற்கான முன்னாயத்தங்கள் பற்றி ஆராய்ந்ததாக சபைத்தவிசாளர்  தெரிவித்தார்.

அச்சுவேலி பகுதியின் கரதடி வீதி மற்றும் யாழ் – பருத்தித்துறை வீதியின் ஒருமருங்கில் உள்ள முழங்கன் இந்து மயனத்தினை அண்மித்த பகுதிகளில் வெள்ளநீர்ப்பாதிப்பு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைகக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. 

இதனையடுத்து தவிசாளர், நீர்ப்பாசனத்தினைக்கள பொறியிலளாளர் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து எதிர்காலத்தில் மழைநீரையும் கடலுக்குச் செல்லாது தவிர்க்கின்ற அதேவேளை மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வெள்ள நீர் உட்புகாதவாறு நடவடிக்கை எடுப்பது பற்றி எம்முடன் பிரதேசத்திற்கு வருகைதந்து நேரில் நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

இதன் ஊடாக இப்பகுதிகளில் குடியிருப்பு நிலங்களுக்குள் மழைவெள்ளம் செல்லாதவாறு அமைக்கவேண்டிய மண் அணைகள் தொடர்பில் அரச அதிபர் ஊடாக நீர்ப்பானத்தினைக்களம்  செயற்றிட்டத்தினை இப்பகுதிகளுக்கு ஏற்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *