போலி நாணய தாள்களை பயன்படுத்தி பல வர்த்தகர்களை ஏமாற்றிய இருவர் கைது

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து கொள்ளையிட்டு ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள் கைது. 

மந்துவில் கிழக்கு கொடிகாமத்தில் சேர்நத 19 வயது மற்றும் 21 வயதுடைய இருவரையே கொடிகாமம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த 1ம் திகதி சந்தை வீதி கொடிகாமத்தில் உள்ள சிறு வர்த்தக நிலையத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து 500 ரூபாய்க்கு .

சிகரட் மற்றும் மீள்நிரப்பு அட்டை என்பவற்றை பெற்றுக் கொண்டு 4500 ரூபாய் மிகுதிப் பணத்தின் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

இதே 5000 ரூபாய்ப் பணத்தினை வர்த்தக நிலைய உரிமையாளர்,மொத்த பொருட்க் கொள்வனவு நிலையமொன்றில் பணத்தினை வழங்கிய போது 

அது போலி நாணயத்தாள் என்று தெரியவந்துள்ளது. இது தொட‌ர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது, 

இது போன்ற சம்பவம் ஒன்று 19ம் திகதி அன்று கொடிகாமம் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு.

நிலையத்தில் உள்ள சீ.சீ.ரீ.வி கமராவில் பதிவுகளை பரிசோதித்த பொலிஸார் இரண்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஒரே 

கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து தொடர்ந்தன விசாரணையை நடத்தியதன் மூலம் மந்துவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இரு வரை 

இன்று மாலையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,குறித்த சந்தேக நபர்களை நாளை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த 

நடவடிக்கைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *