யாழில் மகனின் இழப்பால் வயோதிபத் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

தனது மகனின் உயிரிழப்பால் மனமுடைந்த முதியவரான தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

யாழ்.வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மேற்படி முதியவரின் மகன் கடந்த வருடம் வெளிநாட்டிற்கு முகவர் ஊடாக சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக கடும் துயரடைந்த அவர் தொடர்ச்சியாகத் தனது மகனின் நினைவில் மிகுந்த கவலையுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் மகனின் இழப்பால் மன ரீதியான பாதிப்பினை எதிர்கொண்டிருந்த அவர் நேற்றைய தினம்(24) தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதேவேளை, இதேபகுதியைச் சேர்ந்த தேவராஜா துரைராஜா (வயது-66) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *