சாரதிப் பயிற்சி வழங்குவதற்கான புதிய இடத் தெரிவு

தற்பொழுது சாரதிப் பயிற்சிகள் இடம்பெறும் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் சாரதிப் பயிற்சிகள் வழங்குவதற்கான புதிய இடமொன்றை தெரிவு செய்வதற்காக அண்மையில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஆராயப்பட்டது.

இவ் இடம் தெரிவு தொடர்பிலான நேரடி விஜயத்தில் யாழ்மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்கள், வேலனை பிரதேச செயலர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், சாரதிப் பயிற்சிப் பாடசாலையின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தககது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *