கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலையை  நோக்கி சென்ற பஸ்ஸில் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் – கதிர்காமம்  பஸ்ஸை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது,

குறித்த பஸ்ஸில்  பயணித்த அநுராதபுரத்தை சேர்ந்த   21 வயது மற்றும் 28 வயதான இரு இளைஞர்களை 2கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *