நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சாரம் துண்டிப்பு! மக்கள் விசனம்!!

நெல்லியடி பேருந்து நிலையத்தில் மின்சார விநியோகம் இரண்டு வாரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையத்திற்குரிய மின்கட்டணம் கட்டாத நிலையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மலசலகூடத்திற்கு தண்ணீர் வசதியும் இல்லை. அத்தோடு இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டுப் போவதாகவும் பொதுமக்களின் நன்மை கருதி உடனடியாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *