வவுணதீவு கொலையை மூடி மறைக்க கிளிநொச்சியில் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உண்மையில் அந்த கொலை செய்தவர்களை பாதுகாத்து அதனை மூடி மறைக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிஇ வட்டகச்சி பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். இதன் ஊடாக குறித்த கொலையாளியும் கொலைக்கு உத்தரவிட்டவர்களும் மிக கச்சிதமாக பாதுகாக்கபட்டுள்ளனர்.

எமது புலனாய்வு தகவலின்படி வவுணதீவு கொலைக்கும் கிளிநொச்சி கைதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. குறித்த கொலையை இலங்கை அரச இயந்திரம்தான் நன்கு திட்டமிட்டு செய்தது. குறித்த கொலைக்கு சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு இராணுவ தளபதி அவசரமாக மாற்றபட்டார். புதியவர் பொறுப்பெடுத்தார். கொலை செய்த வந்தவர்கள் மோட்டார் சைக்கிலில் அரச பாதுகாப்பு தரப்பினர் பாவிக்கும் மோட்டார் சைக்கிலில் வந்துதான் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

வட்டகச்சி, கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வவுணதீவு பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

நொலை நடந்த இடத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் 500 மீட்டர் தூரத்தில் போலிஸ் நிலையம் உண்டு ஆகவே வெடி விழும்போது ஏன் பொலிசார் உசார் அடையவில்லை ? பாவிக்கபட்ட கைத்துப்பாக்கி லைலென்சர் போட்டு பாவிக்கபட்டுள்ளது. அது இராணுவ பயன்பாட்டில் தற்போது இருந்து வருகிறது. இரண்டு பொலிசாரும் கை கட்டபட்டுள்ளது ஆகவே 04 பேர் இந்த தாக்குதலில் சம்மந்தபட்டுள்ளனர்.

சும்மார் குப்பற கிடக்கவிட்டு தலைக்குமேல் பிடரியில் துவக்கை வைத்து சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் பவுத்திரமாக ஆயுதங்களுடன் சென்றுள்ளார்கள். காலை 7 மணிவரை போலிசார் சென்று பாக்கவும் இல்லை நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

இந்த கொலையை செய்த பாதுகாப்பு தரப்புக்கு சவிஸ் நாட்டில் இருந்து தொலைபேசி போயிருக்கிறது. குறித்த அதே சுவிஸ் இணையத்தள தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை போலிஸ் குற்ற தடுப்பு பிரிவுக்கும் தொலைபேசி போயிருக்கிறது. மொதத்தில் கொலையுடன் தொடர்புடையவர் போலிஸ் விசாரனையை திசை திருப்ப கிளிநொச்சியில் கைது நாடகம் ஒண்றை மாவீரர் தினத்தடன் சேத்து அரங்கேற்றி உள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *