அச்சுவேலியில் இடம் பெற்ற பயங்கரச்சம்பவம்

அச்சுவேலிப்பகுதியில் வீட்டுக்குவந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபர் ஒருவரினை ;சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து வாள் வெட்டிற்கு ,லக்கான நபரை வீட்டில் ,ருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வாளினால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட பகை காரணமாகவே வாளினால் வெட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *