யாழில் மதிய உணவு உண்டு விட்டு உறங்கியவர் மரணம்

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.

யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் , திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் , சுவாச பைக்குள் உணவு பாதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *