யாழ் கொழும்புத்துறையில் மக்களின் உடைமைகளை சேதப்படுத்திய வாள்வெட்டுக்குழு..

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு குழுவினர்  குறித்த  பகுதியில் உள்ள வீடுகளின் கேட், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், 

வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை  கொத்திச் சேதப்படுத்தியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

ஈநிலையில்  சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *