யாழ்தேவி ரயிலில் நடந்த விபரீதம்! பதறிய பயணிகள்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று நண்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த ரயில் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழந்து காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து அனுராதபுரம் ரயில் நிலையத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில் வவுனியா ரயில் நிலையத்தினை சென்றடைந்து நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.

அதன்போது ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென்று ரயில் பெட்டியின் கடைசிப் பெட்டிகள் இரண்டு தனியாக துண்டித்து பிரிந்துள்ளது.

இதனை அவதானித்த கடைசிப் பெட்டியிலிருந்த ரயில் நிலைய உத்தியோகத்தர் தன்னிடமிருந்த சிவப்புக் கொடியினை அசைத்து ரயிலுக்கு சைகை காட்டியுள்ளார்.

உடனடியாக ரயில் நிலையத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த ரயில் சாரதி பல முயற்சியின் பின்னர் ரயிலை நிறுத்தியுள்ளார்.

துண்டித்த இரு பெட்டிகளும் வேகமாச் சென்று ஒன்றுடன் ஒன்று இரண்டும் மோதிய வேகத்தில் சிவப்புக்கொடியுடன் கடைசிப் பெட்டியில் நின்றிருந்த ரயில் திணைக்களத்தின் உத்தியோகத்தர் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார்.

இதனால் அவர் தலையில் காயமேற்பட்டுள்ளது. அத்துடன் கடைசிப் பெட்டியிலிருந்த சிறுவர்கள் உட்பட சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

துண்டித்த பெட்டியை திரும்பவும் இணைத்துக்கொண்டு அனுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இவ்விபத்து குறித்து ரயில் சாரதி முறைப்பாட்டினை மேற்கொண்டார்.

காயமடைந்த ரயில் திணைக்களத்தின் உத்தியோகத்தருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு ரயில் கொழும்பை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ளதாக ரயில் நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *