யாழ் நீதிமன்ற கைதிகளுக்கு போதைபொருள் கொடுத்தவர் சிக்கினார்

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கைதிகளுக்கு தேவையான ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய மர்மநபரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் அவர் தற்போது யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக் கைதி ஒருவர் முற்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார். அவர் இந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை நிறைவடைந்தவுடன் வழக்கின் எதிரிக் கூண்டிலிருந்த கைதியிடம் மற்றைய சந்தேகநபர் சிறிய பொதி ஒன்றை கைமாற்றிக்கொண்டதை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டுள்ளார். அவர் அதனைத் தடுக்க முற்பட்ட போது சரையைக் கொண்டு வந்தவர் அதனை எதிரிக் கூண்டுக்குள் போட்டுள்ளார்.

விரைந்து செயற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் முகுந்தன், அந்தச் பொதியை எடுத்து சம்பவம் தொடர்பில் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். பொதியை ஆராய்ந்து அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *