வன்னி வெள்ளத்துக்கு நிதி சேகரித்தவனுக்கு யாழில்அபிசேகம் செய்த பொதுமக்கள்!!

வெள்ள நிவாரணத்துக்கு என மோசடியாக பணம் சேகரித்தவர் தென்மராட்சியில் சிக்கினார்

வன்னியில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எனத் தெரிவித்து தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி மோசடியாகப் பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அந்தப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு எழுதுமட்டுவாள் வடக்கு பகுதியில் அந்த இளைஞர் மோசடியாக பணம் சேகரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளார்.

அது குறித்து சந்தேகம் கொண்ட அந்தப்பகுதி இளைஞர்கள் அது தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து அங்கு வந்த கிராம சேவையாளர் அந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.  

தப்பியோடியவரை அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். 

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *