யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை

அரசியலுக்கு அப்பால் இந்தப் பதிவை தமிழ் இளைஞர் யுவதிகள் வாசிக்க வேண்டும்.

இந்தப் பதிவில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

போர் குற்றவாளி என்று அறியப்பட்ட மகிந்த றாஜபக்ச ஒரு காலமும் மிருகங்களை இறைச்சியாக உணவில் சாப்பிடுவது இல்லை.

அதாவது தமிழ் மொழியில் சொல்வதானால் சுத்த பிராமணர் சாப்பிடும் சைவ உணவு உண்ணும் குடும்பம்.

போர் குற்றவாளி என்று அறியப்பட்ட மகிந்தவின் மனைவி சிராந்தி கிறீஸ்தவ பெண்.

போர் குற்றவாளி என்று அறியப்பட்ட மகிந்த சிங்கள பவுத்த உயர் சாதி குடும்பத்தை சேந்தவர்.

போர் குற்றவாளி என்று அறியப்பட்ட மகிந்தவின் குழந்தைகளும் மச்சம் சாப்பிடுவது இல்லை.

போர் குற்றவாளி என்று அறியப்பட்ட மகிந்தவின் 02 மகன்மார் கோழி இறைச்சியை சில நேரம் திருட்டாக உண்ணுவார்கள்.

சரி இப்போது விடயத்திற்கு வருகிறோம்.

08 வருடத்திற்கு முதல் மகிந்தவின் மகன் உடற்பயிற்சி ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது உடுப்புக்குப் போடும் சண்லைட் சவுக்காரத்திற்கு விளம்பரம் வரும்போது சவக்கார விளம்பரத்திற்கு வந்த சிறுமி ஆர் என்டு தந்த மெய்பாதுகாவலரிடம் கேட்டுள்ளார்.

03 வருடமாக அந்தச் சிறுமியை தேடி பேயாக அலைந்திருக்கிறார்.

03 வருடம் விசரனாக அலைந்து ஒரு நண்பனை பிடித்து குறித்த சிறுமியை கண்டு பிடித்து 1 வருடமும் 6 மாதமும் சும்மா நட்பாக கதைத்திருக்கிறார்.

அதற்கு பிறகு காதல் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறார். சிறுமி அதைக் கேட்டவுடன் தொலைப்பேசியை துண்டித்துவிட்டு மறைந்துவிட்டார்.

பின்னர் கனகாலத்திற்கு பிறகு கதைத்த சிறுமி தனது குடும்ப கஸ்டம் துன்ப துயரம் எல்லாத்தையும் மலையளவில் அடுக்கிக்கொண்டே போயிருக்கிறார்.

சிறுமி அப்பாவி குடும்பம் காதலன் ஜனாதிபதி மகன்.

அத்துடன் நிறுத்திவிடவில்லை 08 வருடம் குறித்த சிறுமியும் காதலனும் கதைத்து பாத்திருக்கினம்.

கடைசி 03 வருடம் மட்டும் மிகவும் நெருக்கமாக நட்பாக பழகி இருக்கினம்.

எவ்வளவு பணம் பொருள் அதிகாரம் இருந்தும் என்ன பாருங்கள் ஒரு ஒதுக்குப்புறமாக ஒரு தாமரை குளத்தில் மிகவும் வறுமையான முறையில் மாட்டு வண்டியில் மணமகளைக் கூட்டி வந்து இலங்கையின் மிகவும் பழைய காரில் தனது திருமணத்தை செய்திருக்கிறார்.

இதற்கும் அப்பால் தனது காதலி மனைவியாகும்போது தனது காதலிக்காக ஒரு பாடலை தயாரித்துப் பாடி தனது திருமணத்தை நடாத்தி இருக்கிறார்.

சிறுமிக்கு தனது காதலனின் தண்டசோறு சாப்பிட விருப்பம் இல்லை என்பதால் திருமணத்திற்கு முதல் தனது கல்வியை படித்து முடித்து வேலை ஒண்று எடுத்திருக்கிறார் அதேபோல காதலனுக்கும் காதலியின் தண்டசோறு சாப்பிட விரும்பாமல் தனது படிப்பபையும் வேலையையையும் உறுதி செய்திருக்கிறார்.

இதை யாழில் காதலிக்கும் சிறுவர் சிந்திக்கட்டும். காதல் தோல்வியில் தற்கொலை செய்யும் இழைஞர் யுவதிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல 100 ஆகவே மகிந்தவின் மகன் உங்கள் காதலுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

Recommended For You