யாழில் குடிதண்ணீர் விற்பனை மோசடி! 6,800 போத்தல்கள் மீட்பு!! நீதிமன்றம் அதிரடி!!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் இவை சிக்கயுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்றில், நிறுவனத்தின் பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட, போலி இலக்கம் ஒட்டப்பட்டிருந்த குடி தண்ணீர்ப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரத்து 800 குடி தண்ணீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள் கைப்பற்றி, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

போத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டு ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

வழக்கை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபருக்கு அழைப்பானை அனுப்புமாறும், அதுவரை சான்றுப் பொருள்கனை மன்றில் தடுத்து வைத்ததோடு, மாவட்ட விநியோகஸ்தரான 2 ஆம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இவ்வாறு இடம்பெற்ற வழக்கில் பிரதான சந்தேக நபர்களும் மன்றில் தோன்றிய நிலையில் கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேலதி நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது.

இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதிவான், குடி தண்ணீர்ப் போத்தல்கள் அனைத்தையும் அழிக்குமாறும், பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *