100 000 யாழ் மாணவருக்கான இலவச கற்றல் உபகரணம் திட்டம் – 2019/08 – நாச்சிகுடா, கரியாலை நாகபடுவான் , குமுழமுனை, இரணைமாதா நகர்மற்றும் முழங்காவில்

நாச்சிகுடா, கரியாலை நாகபடுவான் , குமுழமுனை, இரணைமாதா நகர்மற்றும் முழங்காவில் பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குக் கற்றல் உபகரணங்களும் , பாடசாலை சீருடைகளும் மற்றும் காலணிக்கான வவுச்சர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் வழங்கிவைத்தார்.

யாழ் குடாநாட்டில் கல்வி கற்கும் 1 இலட்சம் பாடசாலை சிறுவருக்கு இலவசமாகப் பேனை பென்சில் அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஜ.தே.கட்சி ஆதரவாளரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வி இராசாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் இலங்கையின் அத்திவாரமாக இருக்கும் கல்வியில் சட்டத்தை ஒரு பாடமாக மாணவர்மட்டத்தில் இணைக்கப் போராடி வருகின்றார்.

அனைவரும் கல்விப் பயிலும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பது அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 26 ஆம் பிரிவுக் கூறில், அனைவரும் கல்விப் பயிலும் உரிமை உண்டு என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வி அனைவருக்கும் இலவசமாகவும்,கட்டாயமாகவும் தரப்படல் வேண்டும்.தொழில் நுட்பக் கல்வி மற்றும் தொழில் நெறிஞர் கல்வி, அனைவர்க்கும் பொதுவாக கிடைக்க வேண்டும் , உயர்கல்வி அனைவரும் சமமாக பெற கூடியதாக இருக்க வேண்டும் என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது.

கல்வி இராசாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரனின் கல்வி குறிக்கோள்;

01 – முழுமையான மனித ஆளுமையையும், தன்மான உணர்வையும் மேம்படுத்தல் ,

02 – மனித உரிமையையும், அடிப்படை சுதந்திரத்தையும் மதிக்க வலியுறுத்துதல்,

03 – ஒவ்வொருவரும் கட்டற்ற சமுதாயத்தில் திறம்பட பங்கேற்றல்,

04 – உடன்பாடு, பொறுமை மற்றும் தோழமையை அனைத்து நாடுகளிடையேயும், இனத்தவரிடையேயும், சமயத்தவரிடையேயும் மேம்படுத்தல்,

05 – அமைதிக்காக நாடுகளின் செயல்பாடுகளை மேலுயர்த்துதல், ஆனவைகளாகும்.

இதன் ஊடாக தமிழ் , சிங்கள , முஸ்லீம் , பறங்கி மற்றும் ஏனைய இனத்தவரும் இலங்கை தீவில் அமைதியாக வாழமுடியும் என்பது நிதர்சன உண்மையாகும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *