எம்.பியின் மகள் பிரதமர் ரணிலின் அந்தப்புரத்தில்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் எம்.பியின் மகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிதித்துறை ஆலோசகராக கடமையாற்றுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தழிப்பு நிலை தோன்றியுள்ளது.

புலிகளையும் தமிழ் மக்களது அழிவுகளையும் வைத்து அரசியல் பேசி தேசியம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விபச்சாரம் செய்துவருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இதில் தனக்கு ஆசனம் தராதுவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்புவேன் என்று தமிழரசுக் கட்சியை மிரட்டி ஆசனம் பெற்று முதல் தடவை எம்பியான சரவணபவன் இறுதியாக நடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தனது பண பலத்தால் தமிழரசுக் கட்சியை அச்சுறுத்தி சுரேஸ் பிரேமச்சந்திரன் அருந்தவபாலன் ஆகியோரை ஒதுக்கிவிட்டு தனது இருப்பை ஒருவாறு தக்கவைத்துக் கொண்டார் சரவணபவன்.

இந்நிலையில் நல்லாட்சி அரசுக்கு முண்டு கொடுத்து மக்களின் எதிர்காலத்தை தூக்கி நிறுத்தப் போவதாக சொல்லி அரசியல் அதிகாரத்தை பெற்றது தமிழரசுக் கட்சி.

இதில் நூறு நாள் வேலைத்திட்டம் என்று சொல்லி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி வாக்குறுதிகளை பெற்றிருந்த நிலையில் சரவணபவன் எம்.பி தனது முதல் வேலைத்திட்டமாக தனது மகளின் பிறந்த தினத்தை மைத்திரியுடன் யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடியதாகவே இருந்தது.

அதுமட்டுமல்லாது யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் இன்னும் ஏன் தமிழீழம் கிடைக்கவில்லை என்று புலம்பெயர் தேச மக்கள் கேட்டபோது மக்கள் இறந்தது காணாது இன்னும் பல ஆயிரம் பேர் மரணிக்கவேண்டும் என்று கூறியவர் இந்த சரவணபவன்.

இதைவிட தமிழ் மக்களின் அறிவுப் பொக்கிசமான யாழ் பொது நூலகத்தை அழிப்பதற்கு துணை போன சரவணபவன் குடும்பம் எப்பவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அள்ளக் கையாகவே இருந்து வருகின்றது.

தனது பதவிக்காகவும் தனது கொள்ளையடித்த பணங்களை பாதுகாப்பதற்காகவும் அரசியல் பலத்தை பெற்றுக்கொண்ட சரவணபவன் தற்போது தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனம் கொடுக்காது என தெரிந்தவுடன் ஐக்கியதேசிய கட்சியுடன் ஒட்டி உறவாடத் தொடங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்தான் தனது மகளை பிரதமரது அந்தப்புரத்து மகாராணியாக அலங்கரித்து பதவி பெற்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது மகளை அமெரிக்காவில் உயர் பட்டப்படிப்பு படிக்க வைப்பதற்காக பிரதமரது உதவியை நாடி அதற்கான அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிகின்றது.

தமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றி தனது இருப்புக்காக பல கொள்ளைகளையும் கொலைகளையும் அரங்கேற்றிய சரா எம்.பி தற்போது தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளார் என தெரிகின்றது என மக்கள் பேசிக்கொள்கின்றனர்

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *