கிளிநொச்சியில் மாணவன் மீது போதை வியாபாரிகள் தாக்குதல்!

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்று வந்தது. கோணாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் குறித்த மாணவன் தனது பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான தகவலை வழங்கியுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் மாணனைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டனர். அதனால் மகனுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாணவனின் தந்தை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவன் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *