யாழ்ப்பாணம் – நாவந்துறையில் சிறுமியை கடந்த முயன்றவர் – தப்பிக்க விட்ட பொலிஸ்

யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்ம் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் கடந்த வாரம் நாவந்துறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை  கடத்திச் செல்ல முற்பட்டதாகவும், அதேபோன்று நேற்றைய தினமும் குறித்த சிறுமியை கடத்தும் நோக்கோடு அங்கு சென்றதாகவும் பிரதேசவாசிகள்  தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரெனவும், சமையல் வேலைக்காகவே யாழ்ப்பாணத்திற்கு  சென்றவர் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸாருக்கு  தகவல் வழங்கிய போதிலும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பித்தார் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“அந்த நபர் சிகிச்சைக்காக பொலிஸாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 24ஆம் விடுதியில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டார்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர். எனினும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த்தாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *