யாழ்ப்பாண வற்றிய தமிழ் மக்களுக்கு தேடிசென்று தொண்டு செய்யும் தர்சன

யாழ் குடநாட்டில் இராணுவம் என்றால் கொல்லுவார்கள் அல்லது வெட்டுவார்கள் அல்லை கொலை செய்வார்கள் அல்லது கற்பழிப்பார்கள் அல்லது கடத்தி கொலை செய்வார்கள் அல்லது சுவர்கள் அல்லது சூறையாடுவார்கள் என்றுதான் சிறு குழந்தையும் சொல்லும் .

ஆனால் இலங்கை இராணுவ வரலாற்றில் அதுவும் யாழ்ப்பாண தமிழர் விசேடமாக வடமறாட்சி தமிழரின் மனதை எவரும் இலகுவில் சூறையாட முடியாது.

ஆனால் இலங்கையின் இராணுவ சரித்திரத்தில் இரண்டு இராணுவத்தினர் யாழ் குடநாட்டில் தமிழ் மக்களின் மனதை வென்றவர்கள்.

முதலாவதாக இந்த உளவியில் உபாயத்தைப் பயன்படுத்தி வென்றவர் லாரி விஜயறட்ன அவரைக் கடவுளாகவும் தெய்வமாகவும் இறைவனின் அவதாரமாகவும் வடமராட்சி மக்கள் போற்றினார்கள்.

தமிழ் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மரண சடங்கிலும் , திருமண வீட்டிலும் , பூப்புனித நீராட்டு விழாவிலும் , ஏன் பிறந்த தின நிகழ்விலும் , ஆலய நிகழ்விலும் , அலங்கார உட்சவத்திலும் , ஏன் சாதாரண பொதுமக்களின் மரணசடங்கில் , சுடலையிலும் வந்து அறுகு அரிசி போட்டுவிட்டு செல்லும் ஒரு உன்னத மனதாகத் தமிழ் மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

அவரை மிகவும் கொடுமையான முறையில் பிரியாவிடை வைபவத்தில் வைத்து சிலர் கயவர்கள் கொலை செய்தார்கள்.

ஆனால் அத்தகைய ஒரு நிழ்வு இனி ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க இணைவனை வேண்டுவதுடன் அவருடைய மக்கள் மீதான அணுகுKறையை தற்போது கடைப்பிடித்து மக்களின் மனதை வென்று வருகிறார் யாழ் மாவட்ட இராணுவ தளபதி தர்சன கெட்டிஆராச்சி.

விமானம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பல மாணவர்கள் கொல்லப்பட்ட நாகர்கோவில் மகா வித்தியாலயத்துக்கு இன்று இராணுவத்தார் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள், நூலகத்துக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் என்பன வழங்கப்பட்டன.

கொழும்பு கோட்டை அரிமா கழக பிரதிநிதிகள் தலைமையில், யாழ்ப்பாணம் பாதுகாப்பு தலமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி, கொழும்பு கோட்டை 306-c1 அரிமா கழக் பிரதிநிதிகள், மருதங்கேணி கோட்ட கல்வி அதிகாரி திரவியராசா , வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிப் பொருள்களை கையளித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *