வடக்கில் போதை பொருட்கள் விதைக்கப்பட்டுள்ளன

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதை பொருட்களை விதைதார்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகளாலே அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன 

என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் அடம்பன் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற 2019 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில்

நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதை பொருட்களை விதைதிறுக்கின்றார்கள் இதற்கு காரணம் அரசியல் வாதிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களை கொண்டு செல்கின்றார்கள் உண்மையிலேயே அரசியல் வாதிகளுடைய வாகனங்கல் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை பாரளுமன்ற உறுப்பினர் அமைச்சர் என்று குறிப்பிடும் போது பொலிஸ் அதிகாரிகள் வாகங்களை சோதனையிடுவதில்லை அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது இப்படிதான் கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்ததாக தெரிவித்தார் இதை பல இடங்களில் கண்டு பிடித்துள்ளோம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் 

இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும்இதனால் தான் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *