ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்காவும் எமது மண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவே மாத்திரமே இதனை மேற்கொண்டுள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

களுதாவளை மகா வித்தியாலைய தேசியபாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் யோகநாதன், பட்டிருப்புவலக்ல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகம், ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

தேசிய பாடசாலைகளில் தங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற ஆரவ்வத்தினை தற்போது கூடுதலாக காட்டிவருகின்றனர். இது தொடர்பாக அமைச்சிக்கு வருவபவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது எனவே ஒவ்வொரு தொகுதிக்கும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். நகரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளே வளர்ச்சியடைகின்றது. 

யுத்தகாலத்தில் சிறந்த நிர்வாகத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வி சிறந்து விளங்கியது. ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் கடந்த அரசாங்கம் அதனை தடைபண்ணும் நோக்குடன் திட்டமிட்டு இம்மாகாணங்களுக்கு போதை வஸ்துக்களை அனுப்பியுள்ளனர். இதனால் மாணவர்கள் அதற்கு அடிமையான நிலை கடந்த காலங்களிலே ஏற்பட்டு இருந்தது. இன்று நாங்கள் அந்த அரசாங்கத்தை மாற்றி ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். நாங்கள் இந்த நல்லாட்சி அரசாங்த்தை மாற்றியபிற்பாடு இந்த நிலையினை  சற்று மாற்றியமைத்திருக்கின்றோம். 

கடந்தகால அரசாங்கத்தில்  எமது பிரதேச பாடசாலைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் தற்போது  வளப்பற்றாக்குறையுடன் தான் இயங்கிக்கொண்டு வருக்கின்றது. நாங்கள் இன்று பிதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம் அதற்காக பல கட்சிகள் எமக்கு ஆதரவு தந்தது அதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு ரீதியாக எமது அரசாங்த்திற்கு பூரண ஆதரவு வளங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்கா மாத்திரமே இந்த ஆதரவினை எமது அரசாங்த்திற்கு வழங்கியிருக்கின்றனர். வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் இதனை அவர் செய்யவில்லை எமது மண்ணை அவர்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே இதனை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *