கள்ளக்காதலுக்காக தோழரைக் கொலை செய்த ஈ.பி.டி.பி கமலை அரவணைத்த டக்ளஸ்!!

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது
செய்யப்பட்டு நீதிமன்றம் வரையில் சென்ற க.கமலேந்திரன் என்பவர் ஈபிடிபியில் இருந்து
விலக்கப்பட்டிருந்தான். றெக்சியனின் மனைவியுடன் இருந்த கள்ளக் காதல் காரணமாகவே டபனியலை கமல் சுட்டுக் கொன்றான்.

இந்த நிலையில் வெளியாகியுள்ள புகைப்படமொன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவராகவும், ஈபிடிபியின் முன்னாள் மாவட்ட
அமைப்பாளருமாக செயற்பட்ட கமலேந்திரன், றெக்சியனின் கொலை விவகாரத்தில் சிக்கிய நிலையில்
ஈபிடிபியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக டக்ளஸ் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஈபிடிபியால் அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் தற்போது
திருமண வீடொன்றில் ஈபிடிபியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கமலேந்திரன் ஆகியோர்
இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

எனவே கமலை மீண்டும் டக்ளஸ் தேவானந்தா இணைத்துக் கொண்டுள்ளாரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே டக்ளஸ் இவ்வாறான கேவலங்களை தன்னுடன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *