தமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்!

கல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளின் சொர்க்க பூமியாக அது திகழ்கின்றது. யாழ்பாணத்தில் போதைப்பொருள் மொத்தவியாபார வலைப்பின்னல்கள் ஒவ்வொன்றும் சிக்குகின்றபோது, அதன் பின்னணியில் வடபிராந்தியத்தில் முன்னணியில் நிற்கின்ற அரசியல் பிரபலங்களின் கை இருக்கின்றமை வெளிவந்துகொண்டிருக்கின்றது. 

அந்த வரிசையில் அண்மையில் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 108 கீலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மாட்டியுள்ளார் தமிழ் தேசிய போர்வையினுள் ஒழிந்திருந்து மாவீரர்கள் என்போருக்கு வல்வெட்டிதுறையில் விழா நாடத்திக்கொண்டிருந்த சண்முகம் என்பவர். இவர் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை மாநகர சபைக்குட்பட்ட ரேவடி வட்டாரத்தில் உதயசூரியன் சின்னத்தில் „தூய கரங்கள். தூய நகரம்’ என்ற சுலோகத்தின் கீழ் போட்டியிட்டிருந்தவர். தந்தை செல்வாவின் பின் ஒழிந்து நின்று „சுயநிர்ணயமும் நகர அபிவிருத்தியும்’ வேண்டுமென்றால் போடுங்கள் உங்கள் வாக்குகளை எனக்கு என்று கேட்டவர்தான் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன். 

நோர்வே நாட்டிலிருந்து குற்றச்செயல் ஒன்று காரணமாக நாடுகடத்தப்பட்டிருந்த சண்முகம் சொந்தமாக இயந்திரப்படகு ஒன்றை வல்வெட்டித்துறையில் வைத்திருந்து மேற்படி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். 

இலங்கையிலே அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் இன்று தேசியத்தினுள் மாத்திரம் ஒழிந்து கொள்வதில்லை, அவர்கள் தங்களை தாங்களே இலகுவாக விளம்பரம் செய்துகொள்ள மிகவும் மலிவான தளம் ஒன்று உண்டு. அதுதான் மக்களின் அவலங்களும் வறுமைகளும். கொள்ளையடிக்கும், கப்பம் வாங்கும், போதைப்பொருள் கடத்தும் சட்டவிரோத பணத்தை கொண்டு வறுமையில் வாடும் மக்களுக்கு 1000 ரூபாவுக்கு ஒரு பார்சலை கொடுத்து அதற்கு மேலதிகமாக 1000 ரூபாவை ஊடகங்களுக்கும் கொடுத்துவிட்டால், கொள்ளயைடிப்பவன் வள்ளலாகின்றான். அவனுடைய பின்னணி தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை. அவன் தனது தொழிலை தங்கு தடையின்றி செய்து முடிக்கின்றான். 

கீழுள்ள படங்களில் அவ்வாறான காட்சிகளை கண்கின்றீர்கள். கண்டனத்திற்குரிய விடயம் யாதெனில் சுவிட்சர்லாந்திலிருந்து குழுவொன்று இவனுக்கு உதவியும் ஒத்தாசையும் புரிகின்றது என்பதாகும்.

இவ்வாறே குறித்த கஞ்சாக்கடத்தல்காரன் வல்வெட்டித்துறையின் முக்கிய பிரமுகராக காண்பிக்கப்படுகின்றான். அங்கு இடம்பெறுகின்ற கலைகலாச்சார நிகழ்வுகளின் முக்கிய பிரதிநிதியாக கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவர்கள் இவன் கையால் பரிசில்கள் வழங்கப்படும் காட்சிகளை இங்கு காணலாம். இவர்கள் வழர்ந்துவந்து நாங்கள் போதைப்பொருள் கடந்தல்காரனின் கையால் பரிசில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளட்டும். 

வல்வெட்டித்துறையில் மாவீரர் நிகழ்வுகளை நிகழ்திய மாபெரும் வீரன் தனது வீர தீர செயல்களை காண்பிக்கும் செல்பி இது. கயவர்கள் தமது இருப்பிற்காக எதுவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது சிறியதோர் உதாரணம். 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *