யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றது

இன்றைய தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ராஜித சேனாரத்ன மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு இந்த காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கின் பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக இந்த காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் போது மக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *